நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி
     
         
             
 
sign up for e-zine  
 
 

Facilities

வசதிகள்

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி, ஒரு முதன்மையான வடிவமைப்பு  மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் கல்விசார்ந்த நிறுவனம், ஃபேஷன் தொழில்துறைக்குள்  செல்லக்கூடிய தொழில்வல்லுனர்களின் தரத்திற்கான ஒரு மதிப்பீட்டை அளவை உருவாக்குவதற்கு எண்ணுகிறது. நிறுவனம் நடைமுறை மற்றும் கோட்பாட்டு பயிற்சியை அளிப்பதற்கு புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் நவீன கட்டமைப்பையும் உபகரணங்களை அளிக்கிறது. அளிக்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் மாணவர்களை பரிட்சித்து படைப்புத்திறன் மிக்க யோசனைகளை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது.


கலகலப்பான மற்றும் அதிர்வுகள் மிக்க வளாகங்கள் என்ஐஎஃப்டியில் உலகிலேயே சிறந்தவற்றிற்கு சமமானவையாக இருப்பதை நிறைவு செய்வதாக உள்ளன. விரிவுரை அறைகள், டிசைன் ஸ்டூடியோக்கள்,  மற்றும் ஆய்வுக்கூடங்கள், வள மையங்கள், மற்றும் விடுதிகளுடன் முழுமையாக  அமையப்பெற்ற அனைத்து என்ஐஎஃப்டி கட்டிடங்களும்  படைப்புத்திறன்மிக்க கட்டுமானம் மற்றும் விசாலமானதன்மையை வரையறுக்கின்றன. கல்விகட்டமைப்பு செய்முறை அனுபவம்
மூலமான செயல் முறை கல்வி  அமைப்புகள் மற்றும்  நவீனத் தொழில்நுட்பங்களை வலியுறுத்துகின்றது.

டிசைன் ஸ்டூடியோக்கள் மற்றும் டெக்னோ லேப்களில் உருவாக்கவும்
வளாகத்தில் இருக்கும் டிசைன் ஸ்டூடியோக்கள் பரிசோதனை செய்து புதுமையாக்குவதற்கான ஒரு அபரீதமான வாய்ப்பாகும், அதே சமயம் ஆய்வுக்கூடங்கள் உயர் தொழில்நுட்ப பணிப் பகுதிகளை தொழில்துறையின் நேரடியான அம்சங்களை அளிக்கிறது.

உயர் தர விரிவுரை அறைகள்
நன்கு ஏற்படுத்தபட்ட வகுப்பறைகள் நவீன பயிற்று நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, உயர் ஊடாடு அமர்வுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐடி பொது அறிவுத்திறக் கல்வி
ஃ பேஷனையும் தகவல் தொழில்நுட்பத்தையும் ஒரு அர்த்தமிக்க வழியில் ஒருங்கிணைப்பதற்கான திறனிலேயே ஃபேஷன் வல்லுனர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. அனைத்து என்ஐஎஃப்டி மையங்களிலும் ஐடி உதவி என்பது ஒரு தீவிரமான அம்சமாக இருக்கிறது மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் நவீனத் தொழில்நுட்பத்துடனான  வண் மற்றும் மென்பொருட்களோடு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வள  மையம்
புதுடெல்லியில் உள்ள தேசிய வள மையம் மற்றும் ஒவ்வொரு என்ஐஎஃப்டி மையத்திலும் உள்ள வள மையம் தகவல் மற்றும் அறிவுத் தூண்களாகும். ஒவ்வொரு வள மையமும் அச்சு, காட்சி மற்றும் படைப்புத்திறன் பொருள் வளங்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன: அவை சர்வதேச மற்றும் நவீன இந்திய ஃபேஷனுக்கான ஆய்விற்கான இந்தியாவில் கிடைக்கப்பெறும் ஒரே அமைப்பாக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களாகும். வள மையங்கள் தகவல் சேவைகளை வடிவமைப்பு சமூகம், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு அளிக்கின்றன.

RC-இல் உள்ள  சேகரிப்புகள் உள்ளிடுவன:

·         புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள்

·         தேசிய மற்றும் சர்வதேச ஃபேஷன் மற்றும் டெக்ஸ்டைல் சஞ்சிகைகள்

·         ஒலி-ஒளி ஆதாரங்கள்

·         YSL, சேனல், அர்மானி, கிரிஸ்டியன் டியோர்,டோல்ஸ் மற்றும் கபான்னா முதலான சர்வதேச சேகரிப்புகள்

·         ரூது குமார், ஹேமந்த் த்ரிவேதி, ரோஹித் பால், சுனிதா வெர்மா முதலானவர்களின் இந்தி சேகரிப்புகள் மற்றும் என்ஐஎஃப்டி மாணவர்களின் சேகரிப்புகள்

·         டெக்ஸ்டைல் சேகரிப்புகள்

அளிக்கப்படும் சேவைகள்:

·         பார்வை சேவை

·         ஆன்லைன் பப்ளிக் ஆக்சஸ் கேடலாக் (OAPC)

·         பிபிலியோகிராஃபிக் சேவை

·         இன்டெக்ஸிங் சேவை

·         சுழற்சி சேவை

·         ரெப்ரோகிராஃபிக் சேவை 

·         வண்ண சேவை

 

 

Conference Halls
The Institute houses spacious conference/seminar halls that serve as perfect meeting grounds for presentations, interaction and discussions.

மாநாட்டு கூடங்கள்
நிறுவனம்  காட்சிப்படுத்தல், உரையாடல் மற்றும் விவாதங்களுக்கான சரியான சந்திப்பு இடங்களான விசாலமான மாநாட்டு/கருத்தரங்கக்கூடங்களைக் கொண்டிருக்கின்றன.

ஷோகேஸ்
என்ஐஎஃப்டியில் இருக்கும் ஆம்ஃபி தியேட்டர்கள் மற்றும் ஆடிட்டோரியாக்கள் மாணவர் காட்சிப்படுத்தல்களுக்கும் சேகரிப்புக் காட்டுதல்களுக்கும்  பொருத்தமானவை.

பொழுதுபோக்குப் பகுதி
மாணவர் செயல்பாட்டுக் குழுக்கள்,  அதாவது, கலாச்சார நாடகக் குழு, விளையாட்டு, சாகச மற்றும் புகைப்படக் குழு, இலக்கியக் குழு மற்றும் சுற்றுச்சூழல் குழு விரிவான அளவிலான பொழுதுபோக்குகளை விளையாட்டுக்களை மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழக்கமான அடிப்படையில் ஏற்பாடு செய்கின்றன. என்ஐஎஃப்டி வளாகங்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான போதுமான இடத்தைக் கொண்டிருக்கின்றன, அவை மாணவர்களை தங்களின் தனிப்பட்ட ஆர்வங்களைப் பின்தொடர்வதற்கும் சமூக அக்கறையுடன் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கின்றன.

சில்அவுட்!      
பல்வேறு வகையான உணவு மற்றும் நட்பான சூழல் காஃபேடேரியாக்களை மாணவர்கள் இளைப்பாறுவதற்கும் தங்கள் நண்பர்களுன் உரையாடுவதற்குமான பொருத்தமான இடமாக ஆக்குகிறது.

விடுதிகள்
என்ஐஎஃப்டி அனைத்து மையங்களிலும் வசிப்பிட உறைவிட வசதிகளை அனைத்து மாணவிகளுக்கும் அளிக்கிறது. நிரந்தரமான விடுதி வசதிகள் வளாகத்துக்குள்ளேயே பெங்களூர்,   சென்னை, ஐதராபாத், மும்பை மற்றும் ரேபரேலியில் கிடைக்கப்பெறுகின்றன. புதுடெல்லி, கொல்கத்தா, மற்றும் காந்தி நகரில் வளாக விடுதி வசதிகள் இல்லை என்றாலும், போதுமான வசிப்பிட உறைவிட வசதிகளை பெண்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து என்ஐஎஃப்டி விடுதிகளும்  இலாப/நஷ்ட  அடிப்படையில் இல்லாமல் நடத்தப்படுகின்றன.  ரேபரேலியில், வளாக விடுதி உறைவிடம்  ஆண்களுக்கும் கிடைக்கப் பெற செய்யப்படுகிறது.

 

அனைத்து விடுதி இடப் பரப்பெல்லையில் தனியார் வசிப்பிட உறைவிடங்களில் வாடகைக்கு நடத்தப்படுவனவற்றை உள்ளிட்டு அனைத்திலும் 24 மணிநேர தொழில்முறைப் பாதுகாப்பு, அழைப்பின் பேரிலான ஒரு மருத்துவர் மற்றும் விடுதி வார்டன்கள் கிடைக்கப் பெறுகின்றனர். தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், சில உள்ளரங்க மற்றும் வெளிப்புற விளையாட்டுகளும் விடுதிகளில் கிடைக்கப் பெறுகின்றன.

கல்விசார் காலஅட்டவணை

பாடம்

தேதி

முதல் பருவத் துவக்கம்

28/07/08

FPக்கான முதல் பருவம், இளநிலை மூனறாம், ஐந்தாம், ஏழாம் பருவம் மற்றும் முதுநிலை மூன்றாம் பருவத்தின் ஆரம்பம்

04/08/08

மாணவர்களுக்கான பருவதேதி நிறைவு

19/12/08

இரண்டாம், நான்காம், ஆறாம், எட்டாம் பருவங்கள் மற்றும் வகுப்புகளின் ஆரம்பம்

05/01/09

மாணவர்களுக்கான நிறைவு நாள்

25/05/09