![]() |
![]() |
![]() |
|||||||||
| நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜ | |||||||||||
|
|
|||||||||||
|
அறிமுகம் |
தொடர் கல்வி | ஆசிரியர் குழு உறுப்பினர்கள் | |||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
என்ஐஎஃப்டியின் பாடத்திட்டம் மாணவர்களை உலகளாவிய வலையமைப்பில் எளிதாக ஒன்றுவதற்கும், உள்ளூர் தொழில்துறை போக்கினில் பெரிய அளவில் பாராட்டினைப் பெறுவதற்கும் அனுமதிக்கிறது. பல்லொழுங்கு மற்றும் பரந்த அடிப்படையிலான கட்டமைப்பு அனைத்து வகையிலும் மாணவர்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை மற்றும் வணிகத்தின் மாறிவரும் உதாரணங்களிலின் அடிப்படையில், அதன் பொருளடக்கம் மற்றும் ஆராய்ச்சிமுறை கல்வியாளர்களாலும் தொழில்துறை அனுபவமிக்கவர்களாலும் தொடர்ச்சியாக மறுஆய்வு செய்யப்படுகின்றன. வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் நான்காண்டு இளநிலை மற்றும் இரண்டாண்டு முதுநிலை திட்டங்களை என்ஐஎஃப்டி அளிக்கிறது.
பயிற்றுமுறை
மதிப்பீடு
முக்கிய கல்விசார்ந்த நடவடிக்கைகள் கைவினை ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல்: என்ஐஎஃப்டியின் கைவினைத் தொகுதி முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் கள வருகைகளை மேற்கொண்டு கைவினைஞர்களுடன் அவர்களின் தயாரிப்புகளுக்கு மதிப்புக்கூடும் வகையில் ஊடாடிப் பணியாற்றுகிறார்கள். கல்விசார் வருகைகள்: கோட்பாடுகளைப் பயிற்சியுடன் ஒருங்கிணைப்பதற்காக தொழில்துறை தொகுதிகளுக்கு மாணவர்கள் அடிக்கடி வருகை தருகிறார்கள். அவர்கள் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கண்காட்சிகள் மற்றும் வணிக சந்தைகளுக்கும் சமீபத்தைய ஃபேஷன் போக்குகளுடன் முன்னேறி செல்வதற்காக வருகை தருகிறார்கள். I தொழில்துறை இன்டர்ன்ஷிப்: தொழில்துறையின் கட்டமைப்பு மற்றும் செயல்முறை பகுதிகளை அறிந்துகொள்வதற்காக மாணவர்கள் ஆறு முதல் எட்டு வார இன்டர்ன் செய்வார்கள். இன்டர்ன்ஷிப்பின்போது, மாணவர்கள் உண்மையான தொழில்துறை சூழல்க ளை ஏற்றுக்கொள்வதற்கு கற்றுக்கொள்வார்கள் மற்றும் பயிற்சி செய்வதற்கான திட்டங்கள் கொடுக்கப்படம், அவை அவர்களை ஒரு உண்மையான சுற்றுச்சூழலில் முடிவெடுப்பதற்கு இயலச் செய்யும். இன்டர்ஷிப் தொழில்துறை மற்றும் மாணவர்கள் இடையேயான உறவினை பலப்படுத்த உதவும். வடிவமைப்பு சேகரிப்பு / டிப்ளோமா செயல்முறைத் திட்டம்: பயிற்சிக் கல்வியின்போது உள்ளீர்த்துக்கொள்ளப்பட்ட பல்வேறு திறன்களை அனைத்தையும் மாணவர்கள் எடுத்துகொள்ளும் பட்டத்திற்கான செயல்முறைத் திட்டம் ஒருங்கே கொண்டு வருகிறது. தொழில்துறையினால் ஏற்பாடு செய்யப்படும் செயல்முறைத் திட்டம் மாணவர்களுக்கும் தங்களின் கல்விசார்ந்த அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் செயல்முறையாக அறிந்துகொள்வதற்குமான ஒரு சவாலான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. |
|
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||