நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி
     
     
             
 
sign up for e-zine  
 
 

இளநிலைத் திட்டங்கள் | முதுநிலைத் திட்டங்கள்

இளநிலைத் திட்டங்கள் - டிசைன்

பி.டெஸ் (ஃபேஷன் டிசைன் )
பி. டெஸ் (லெதர் டிசைன்)

பி.டெஸ் (அசெஸரி டிசைன்)

பி.டெஸ் (டெக்ஸ்டைல் டிசைன்)
பி. டெஸ் ( நிட்வேர் டிசைன்)
பி.டெஸ் (ஃபேஷன் கம்யூனிகேஷன்)

இளநிலைத் திட்டங்கள் - டெக்னாலஜி

பி. எஃப்டெக் (அப்பாரல் புரொடக்ஷன்)


பி.எஃப்.டெக் (அப்பாரல் புரொடக்ஷன்)  

இந்தத் திட்டம் ஃபேஷன் டெக்னாலஜித் துறையால் அளிக்கபடுகிறது, இது மாணவர்களை  முக்கிய ஆடை உற்பத்தி தொழில்நுட்பத்தில்  பயிற்சி அளிக்கிறது.  அப்பாரல் புரொடக்ஷனின் சிறந்த நடைமுறைகள் மீதான வலியுறுத்துதலுடன் தகவல்தொழில்நுட்பத்தின் புரிந்துகொள்ளுதல் மற்றும் பயன்பாட்டையும் சேர்த்து, தொழில்துறையில் ஃபேஷன் டெக்னாலஜிப் பிரிவில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கக்கூடிய தொழில்வல்லுனர்களைத் திட்டம் தயார்படுத்துகிறது.

அப்பாரல் உற்பத்தி தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை செயல்முறை அறிவைத் திட்டம் அளிக்கிறது. ஆய்வுக்கூடங்கள், வகுப்பறை அமர்வுகள் மற்றும் தொழில்துறை அனுபவம் மூலம் உபகரணம் மற்றும் செயல்முறைகள் குறித்து கற்கிறார்கள். அப்பாரல் புரொடக்ஷனில்  கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை போற்றவும், மதிப்பீடு செய்யவும் செயல்படுத்தவும்  தகவல் தொழில்நுட்ப உள்ளீடு மாணவர்களுக்கு உதவுகிறது. நான்காண்டு ஆழந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் தொழில்துறையில் மாறுதல்களை உருவாக்குவதற்கான பங்கினை அளித்திடத் தயார் ஆகிறார்கள்.

பொருளடக்கம்

ஆண்டு 1
மாணவர்களை தத்துவங்கள், அடிப்படைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து அறிந்துகொள்வதற்கும், ஃபேஷன் தொழில்துறையில் வடிவமைப்பு,  மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான அடித்தளத்தை அமைக்கவும்  முதலாமாண்டுத் தூண்டப்படுகிறது.

ஆண்டு 2
ஃபேரிக் கூறுகள்,  உற்பத்தி செயல்முறை மற்றும் இயந்திரம், புள்ளியியல் கருவிகள், அப்பாரல் துறை சம்பந்தப்பட்ட மென்பொருள், உற்பத்தித் திட்டமிடல், மற்றும் ஆடைகளின் கட்டுமானம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைத் திறன்களை இரண்டாமாண்டுஅளிக்கிறது. ஆண்டின் இறுதியில் மாணவர்கள்  தொழில்பயிற்சிக்காக ஜவுளித்துறைக்கு செல்கிறார்கள்.

ஆண்டு 3
மாணவர்கள் செயல்முறை உத்திகளைப் புரிந்துகொள்வதையும், உற்பத்தித் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு, வணிக மேலாண்மை ஆகியவற்றின் திறன், சிறப்புப்படுத்தப்பட்ட ஆடைகள், வினியோகத் தொடர் மற்றும் ஐடி பயன்பாடுகளின் திறனை வளர்த்துக் கொள்வதையும் மூன்றமாண்டு தயார் செய்கிறது. மேலும் தத்துவத்தை  நடைமுறையுடன் இணைத்து, மாணவர்கள் தொகுதி தொழிற் பயிற்சிகளை ஐந்தாம் பருவத்தின் இறுதியிலும் மற்றும் அப்பாரல் தொழிற்பயிற்சியை ஆறாம் பருவத்திற்கும் பிறகும் எடுத்துக்கொள்வார்கள்.

ஆண்டு 4
இறுதியாண்டு மாணவர்களை முடிவெடுக்கும் திறன் சார்ந்த பாடங்களை அட்வான்ஸ்டு ஜாவா, ஈ-காமர்ஸ், திட்ட மேலாண்மை, எர்கோனெமிக்ஸ் முதலியவற்றை உள்ளிட்டு பல்வேறு வகையான தேர்ந்தெடுக்கக்கூடிய உள்ளீடுகளை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்புடன் தயார்படுத்துகிறது. துறை சார்ந்த மற்றும் பொது தேர்ந்தெடுப்பிற்குரிய பாடங்கள் மாணவர்களுக்கு தங்களின் விருப்பமான பகுதிகளில் மேலும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்து துறைகளுக்கு இடையேயான சவால்களை போற்றுவதற்கு உதவுகிறது. பல்வேறுப் பகுதகளில் ஆழ்ந்த ஆராய்ச்சி திட்டங்களை சமர்பிப்பதன் மூலம் இந்தத் திட்டம் மாணவர்களை உயர்நிலையை அடையச் செய்கிறது.

வாழ்க்கைத் தொழில்கள்
இந்தத் திட்டம் மாணவர்களை உற்பத்தி, தர உத்தரவாதம், ஆடைத் தொழில்நுட்பம், தொழில்துறைப் பொறியியல், உற்பத்தித் துறை, ஆதாரப்படுத்துதல், திட்ட பகுப்பாய்வு, அமைப்புப் பகுப்பாய்வு, மென்பொருள் உருவாக்கம், இன்ட்ராநெட் நிர்வாகம், இன்டர்நெட் புரோகிராமிங், தரவுதள பயன்பாடு மற்றும் வலையமைப்பு மேலாண்மை ஆகியவற்றில் பல்வேறு வகையான வாழ்க்கைத் தொழில்களைத் தேடிக்கொள்வதற்கு தயார்படுத்துகிறது.

நட்சத்திர வேலையளிப்பவர்கள்
போகர்னா குரூப், கினி &  ஜானி, இன்டெக்ரா அப்பாரல்ஸ், தேர்டு ஐ சைட்,  டாஃபேல்ஸ், லகுணா குளோதிங், ஏஒய்என் அசெஸரீஸ் (ஹாங்காங்), பான்டலூன், ஐடிசி எல்ஆர்பிடி, கலர்ப்ளஸ், செலிப்ரிட்டி ஃபேஷன்ஸ், அம்பத்தூர் குளோதிங் கம்பெனி, எல்டி கார்லே, ஆர்எம்எக்ஸ் ஜோஸ், டெக்ஸ்போர்ட் சிண்டிக்கேட், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், முதலியன