நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி 
     
 
     
      பேஷன் குளோஸரி        
 
ஈ-ஸைனுக்கு புகுபதிவு செய்க  
 
 

சொற்றொடர்

விவரணை

அச்கன் ( இ)

நீண்ட கைகளை உடைய அங்கி போன்ற ஆடை, முழுஸ்கர்ட் உடன், முழுங்கால் நீளத்திற்கு அல்லது அதற்கும் குறைவாக, முன்பக்கம் நடுவில் கீழ்வரை பொத்தானிடப்பட்ட பொதுவாக உயர் கழுத்துப்பட்டி உடனானது. ஆண்களால் அணிப்படுவது.

அங்கரக்கா (இ)

முழுகையுடைய வெளிப்புற அணிந்துகொள்ளப்படுகிற,  பொதுவாக மார்பு பகுதியில் திறந்திருக்கின்றன, மார்பை  மறைத்து ஒரு இன்னர் ஃப்ளாப்புடன் கட்டப்பட்டிருப்பது. ஆண்களால் அணிப்படும் முழு ஸ்கர்ட் உடனான பல்வேறு நீளங்களைக் கொண்டது.

பந்தனி அல்லது பாந்தினி (இ)

ஒரு பாரம்பரிய டையிங் தொழில்நுட்பம், அதில் சாயமிடப்படாத பகுதிகள் நூலால் இருக்கக்கட்டப்பட்டு பாதுகாக்கப்படுவது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பிரபலமானது.

பூடா ( இ)

இந்தி டெக்ஸ்டைல் டிசைனில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழக்கமாக பெரிய பூக்கள் அல்லது இலைகளுடனான வேலைப்பாடுடையது.

பூடி (இ)

இந்திய டெக்ஸ்டைல் டிசைனில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழக்கமாக சிறய பூக்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதாக இருக்கும் வேலைப்பாடு.

 சோகா அல்லது சோக்கா (இ)

 ஒரு மேலங்கி போன்ற ஆடை, தளர்வான கைகளை உடையது ஒரு உள்ளாடை மேல் அணியப்படுவது.  பருத்தி, ப்ரோகேட் அல்லது காஷ்மீரியினால் தயாரிக்கப்படுவது; ஆண்களால் விழாக்காலங்களில் அணியப்படுவது.

சோலி (இ)

குட்டையான  இறுக்கமாக இருக்கக்கூடிய கச்சுப் போன்ற பின்பக்கம் மூடிய அல்லது மூடாத, முன்பக்கமோ அல்லது பின்பக்கமோ இருக்கக் கட்டப்படுகிற பல்வேறு விதங்களில் இருக்கின்ற மார்பக ஆடை. சேலை அல்லது காக்ராவுடன் இந்தியா முழுவதும் அணிந்து கொள்ளப்படுவது.

சுரிதார் பாஜாமா (இ)

சுருக்கு  பைபோன்ற கால் சட்டைகள் கால் கீழ் பகுதியில் வளையம் போன்று அல்லது சுருங்கள் போன்று இரப்பது. ஆண்கள் மற்றும் பெண்களால் குர்தா/குர்தி உடன் பாரம்பரியமாக அணியப்படுவது.  பெயர் வளையல் எனப் பொருள்படும் சூரி என்ற சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது.

தோத்தி (இ)

பொதுவாக தைக்கப்படாத செவ்வக வடிவினைக் கொண்டிருக்கும் பாரம்பரியமான கீழ்ப்பகுதி ஆடை இடையிலும் கால்களிலும் வழக்கமாக மடிப்பு கொண்டது மற்றும் இடுப்பில் முடிச்சிடப்படுவது.  ஆண்கள் மற்றும் பெண்களால் அணியப்படுவது.

துப்பட்டா (இ )

 ஒரு முகத்திரை அல்லது  உடலின் மேல் பகுதியைச் சுற்றி தளவர்காக மடித்து போர்த்தப்படுவது. பாரம்பரியமாக வட இந்தியப்  பெண்களால் அணிந்துகொள்ளப்படுவது.

காக்ரா ( இ)

ஒரு இடுப்பு பட்டியுடன் சேர்க்கப்படும் மற்றும் பெரிய அளவிலான பரப்பினைக்  கொண்ட பாவாடை. தெளிவாகவோ அல்லது நிறைந்த எம்பிராய்டரியுடன் இடுப்பில் கட்டக்கூடிய ஒரு நாடாவைக் கொண்டது. பாரம்பரியமாக இந்தியாவின் வடக்கும் மற்றும்  மேற்கு மாநிலங்களில் பெண்களால் அணியப்படுவது.

கோட்டா (இ)

தங்கம் அல்லது வெள்ளிநூலால் செய்யப்பட்ட நாடா

ஜாமா

முழுகை யுடான வெளிப்புற ஆடை ஆண்களுக்காகனது, இருக்கமாக கச்சினை கட்டியிருப்பது, ஸ்கர்டில் பரப்பு மற்றும் இடது  மற்றும்  வலது அக்களுக்கு கீழே கட்டப்படுவது.  மொகலாய மற்றும் இராஜ்புதான அரசவைகளில் பிரபலமானது.

ஜாம்தானி

மெல்லிய பருத்தி மஸ்லினால் அடர்த்தியான மெல்லிய பருத்தியால் சித்திரபூ வேலைப்பாடு செய்யப்பட்டது.  இப்போது வங்கதேசத்தில் இருக்கும், டாக்காவில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவது.

ஜோத்பூர்ஸ் (இ) & (ஆ)

மூட்டுகளில் பெரிய பை போன்ற  குறுங்காற் சட்டைகளைக் கொண்ட பிடிப்பான  ஆடைகளுக்கான முட்டி முதல் கணுக்கால் வரையிலான இருக்கமான ஆடை.  ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து பெயர் பெறப்பட்டது.

காதி (இ)

கையினால் நூற்கப்பட்டு கையினால் நெய்யப்பட்ட (பருத்தி அல்லது பட்டு) ஆடை; இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு சின்னம்

குர்தா (இ)

நீண்ட வெளிப்புற ஆடை முழங்கால் வரை நீளமுள்ளது அல்லது பக்கவாட்டு பிளவுகளைக் கொண்டது, பொதுவாக பரப்பினைக் கொண்டது. பொதுவாக பாரம்பரியமிக்க தளர்வான கால் சட்டைகள் (பைஜாமா) அல்லது சுடிதாருடன் வட இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களால் அணியப்படுவது.

லெஹங்கா (இ)

சோளி அல்லது ஓடானியுடன்  அணிந்துகொள்ளப்படும் ஒரு இழுவை நாடாவுடனானப் பாவாடை

லுங்க (இ)

செவ்வகமான துண்டுத் துணி நீளமாக ஆண்களால் அணிந்துகொள்ளப்படுவது.

மஸ்லின் (இ)

எடை குறைந்த தெளிவான அல்லது சல்லடை போன்ற தெளிவானத் திறந்த ஆடைக்கானப் பொதுவான பெயர்.

ஓடானி அல்லது ஓட்னி (இ)

காக்ரா அல்லது லெஹங்காவுடன் அணிந்து கொள்ளப்படும் முகத்திரை அல்லது சுற்று டை. தலையை மூடி கழுத்தைச் சுற்றி ஒரு முனை இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் பாரம்பரிய ஆடை.

பாக்டி அல்லது பக்டி (இ)

தலைப்பாகை, நீளமான ஆடை  தலையைச் சுற்றி இந்தியா முழுவதும்  பொதுவாக ஆண்களால் அணிந்து கொள்ளப்படுவது.

பஷ்மினா

மலைப்பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில்  ஆட்டு ரோமத்தால் நெய்யப்படும் ஆடை. காஷ்மீரி என்றும் அழைக்கப்படுவது.

பல்லூ (இ)

புடவையின் ஒரு பகுதி  மடித்து தோளில் போடப்பட்டு பொதுவாக வெவ்வேறான மற்றும் பலமான மேற்பரப்பு அணிமணிகளைக் கொண்டிருப்பது.

ஃபுல்காரி (இ)


பஞ்சாபி எடுத்துகாட்டாகக் கொண்ட பூவேலைப்பாடு.  முகத்திரையையும் பிற ஆடைத்துண்டுகளையும் அழகுபடுத்தப் பயன்படுவது.

பைஜாமா அல்லது பயிஜாமா (இ)

ஆண்கள் மற்றும் பெண்களால் இந்தியாவில் அணிந்துகொள்ளப்படும் கால்சட்டைப்போன்ற ஆடை. பல வெட்டுக்கள் மற்றும் வடிவங்களில் வருவது.

சாரி (இ)

ஐந்து மீட்டர் நீளம்  கொண்ட இந்தியாவில்பெண்களால் அணிந்துகொள்ளப்படும் தைக்கப்படாத மடிப்புடன் துணிக்கான பெயர். பொதுவாக சாரி அலங்கரிக்கப்பட்ட முனையுடன்  மற்றும் ரவிக்கை அல்லது நீண்ட பரப்பினைக்கொண்ட பெட்டிக்கோட்டுடன் அணிந்துகொள்ளப்படும்.

சல்வார் (இ)

பைஜாமா போன்ற கீழ்ப்பகுதியுடனான, பைபோன்ற மற்றும் பரந்த மேற்பரப்பினைக் கொண்ட கால்கள் மற்றும் கணுக்காலில் தளர்வாக இருக்கும் ஆடை.  பொதுவாக இந்தியாவில் பெண்களால் மற்றும் சில பகுதிகளில் ஆண்களால் அணிந்துகொள்ளப்படுவது.

ஷாராரா (இ)

தளர்வாகப் புரளும் பைஜாமா போன்ற கீழ்ப் பகுதியுடனான ஆடை. சில நேரங்களில் அதிகமாக அழகூட்டப்பட்டு முகத்திரையுடன் அணிந்து கொள்ளப்படுவது.

ஷேர்வானி (இ)

மேலாங்கி போன்ற பிடிப்பான முழங்கால் வரை நீண்ட ஆடை மற்றும் இருக்கமான பொத்தான்களை முன்பக்கம் கொண்டது. ஆண்களால் அணிந்துகொள்ளப்படுவது.

ஜர்தோஸி

தங்கம் அல்லது வெள்ளில் உலோக நூலால் மேற்பரப்பில் அணிகலனாக்கப்படும் ஒரு தொழில்நுட்பம்

ஜரி (இந்தி)

வேலைப்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் உலோகம் சுட்டப்பட்ட நூல்

 

 

 

 

Note: (H) - Hindi, (E) – English                குறிப்பு: (இ) – இந்தி,  (ஆ) –