![]() |
![]() |
![]() |
|||||||||
|
a) அந்தரங்கக்
கொள்கை 1. என்ஐஎஃப்டி வருகையாளர்களுடனான ஊடாடலின் போது அனுமதிக்கப்பட்டச் சட்டங்களுக்கு உட்பட்டு வருகையாளர்களின் அந்தரங்கத்தை மதிக்கிறது. இந்த அந்தரங்க அறிக்கை வலைத்தளம் தகவல்களை சேகரிக்கும் வகைகளை உங்களுக்கு அறிவிக்கவும், அந்தத் தகவல்களைப் பயன்படுத்தவும், மற்றும் நீங்கள் என்ஐஎஃப்டிக்கு அளிக்கத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தகவலையும் என்ஐஎஃப்டி பாதுகாப்பது குறித்த அனைத்து வகைகளையும் தெரிவிப்பதற்காக எண்ணப்பட்டதாகும். 2. வலையமைப்பு பாதுகாப்பினையும், நிலையான சேவை அனைத்து பயனாளர்களுக்கும் அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, என்ஐஎஃப்டி வலையமைப்புப் போக்குவரத்தைக் கண்காணித்தல், அங்கீகாரமற்ற அணுகல் அல்லது பொதுவானதல்லாத தகவல்களை அணுகுதலுக்கான அடையாளம் காணுதல், கம்ப்யூட்டர் வைரஸ்களை அறிதல் மற்றும் என்ஐஎஃப்டி கம்ப்யூட்டர்களை அல்லது வலையமைப்புகளை பாதிக்கக்கூடிய பிற மென் பொருட்களை அறிதல், மற்றும் என்ஐஎஃப்டி வலையமைப்புசெயல்பாடுகளைக் கண்காணித்து ட்யூன் செய்தல் போன்றவற்றை செய்வதற்காக என்ஐஎஃப்டி மென்பொருள் அமைப்புகளை நியமிக்கிறது. இந்த நடவடிக்கைகள் மூலமான தகவல் பாதுகாப்பினை பராமரிப்பதற்கும் மற்றும் என்ஐஎஃப்டி வலையமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் அமைப்புகளின் செயல்பாட்டினை பராமரிப்பதற்குமான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சட்டத்திற்குத் தேவைப்படாத வரை உங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த நடவடிக்கைகள் மூலமாக தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தக்கூடிய தகவல்கள் வெளி நபர்களுக்கு வெளியிடப்பட மாட்டாது. 3. அனேக இணைய தளங்களைப் போன்று, நாங்கள் உங்கள் ஐபி முகவரியை எங்களின் சர்வரின் பிரச்சினைகளை அறிவதற்காகவும், எங்களின் வலைத்தளத்தை நிர்வகிப்பதற்காகவும் பயன்படுத்துகிறோம். உங்கள் ஐபி முகவரி பரந்த டெமோகிராஃபிக் தகவல்களை சேகரிப்பதற்காகவும் பயன்படுத்துவோம். சேகரிக்கப்படும் தகவல்கள் தனிநபர் உறுப்பினர்களை அடையாளப்படுத்துவதாக இருக்காது. 4. என்ஐஎஃப்டி வலைதளத்தை பயன்படுத்தும் நிகழ்வின் போது, உங்கள் தேவைகளுக்கு என்ஐஎஃப்டி சேவையாற்றுவதற்கு உதவுவதற்காக தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவல்களை அளிக்க நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடும். நீங்கள் அனுப்பும் எந்தவொரு தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவலும் சட்டப்படி எண்ணப்பட்ட நோக்தக்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அத்தகைய ஊடாடலின் போது பகிர்ந்து கொள்ளப்படும் எந்தத் தனிப்பட்டத் தகவலும் இரகசியமாக வைக்கப்படும். 5. அதன் செயல்பாடுகளின் போது என்ஐஎஃப்டி அவ்வபபோது ஆன்லைன் வினாவிடைப் போட்டிகளை அல்லது பிற நிகழ்வுகள் மற்றும் சர்வேகள் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வகையில் நடத்தும் மற்றும் அவ்வாறு சேகரிக்கப்பட்டத் தகவல்களை வருகையாளர்களுக்கான அதன் சேவையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கும் பரப்புவதற்குமான உரிமையக் கொண்டுள்ளது. இந்த சர்வேக்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வமானது மற்றும் பயனாளருக்கும் இந்தத் தகவலை வெளியிடுவது அல்லது வெளியிடாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 6. இணையச் சூழலின் தவறானப் பயன்பாட்டின் பின்விளைவாக ஏற்படும் ஏதேனும் விதிமீறல் அல்லது வருகையாளரின் தனிப்பட்டத் தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்கள் பயன்படுத்துவது போன்றவற்றிற்கு என்ஐஎஃப்டி பொறுப்பாகாது. தவறானப் பயன்படுத்துதல் குறித்த புகாரின் போது அத்தகையத் தவறானப் பயன்படுத்துனர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கையை என்ஐஎஃப்டி எடுக்கும். 7. என்ஐஎஃப்டி உங்களின் தனிப்பட்டத் தகவல்களை காவல்துறையினர் அல்லது பிற விசாரிக்கும் முகமைகளுக்கு ஏதேனும் சந்தேகிக்கப்படும் சட்ட மீறல்கள் குறித்து அவர்களின் விசாரணைக்கு உதவும் பொருட்டு அளிக்கக் கூடும். எங்களின் வழக்கறிஞர்களுக்கு தீவிரமான ஒழுங்கு விதிமீறலுக்காக உங்கள்பெயர் மற்றும் தொடர்புத் தகவலைப் பகிர்ந்துகொள்வதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. 8. அவ்வப்போது இந்த அந்தரங்க கொள்கையை மாற்றியமைப்பதற்கான உரிமையை என்ஐஎஃப்டிக் கொண்டுள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு
அறிவிப்பில் இதன்படி அனைவருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, பிரபலமாக என்ஐஎஃப்டி என்று அறியப்படுவது, ஜவுளித்துறையின் கீழான ஒரு இந்திய அரசு நிறுவனமாகும் மற்றும் அது ஒரு கூட்டாண்மை அமைப்பாக ஏற்படுத்தப்பட்டு தி நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி சட்டம், 2006 [எண் 2006இல் 28] படி ஃபேஷன் டெக்னாலஜியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்காகவும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்களுக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் ஒரு நிகழ்வாக அதன் தலைமை அலுவலகத்தை என்ஐஎஃப்டி வளாகம் ஹவுஸ் காஸ், குல்மொஹார் பார்க், புதுடெல்லி – 110 016, இந்தியா, மற்றும் பிற வளாகங்களை காந்திநகர், சென்னை, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, ரே பரேலி, பட்னா, போபால், கண்ணூர் மற்றும் ஷில்லாங்கிலும் கொண்டு அவற்றின் உரிமையாளர்/சொந்தக்காரராக மற்றும் பின்வரும் அறிவு சார்ந்த சொத்துக்களின் / நன்கு அறியப்பட்ட வணிக முத்திரைகளின் முதல் மேற்கொள்பவராக இருக்கிறது:
நேஷனல் இன்ஸ்ட்டிட்யுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி [வார்த்தைக் குறிப்பு]
என்ஐஎஃப்டி [சுருக்கம் மற்றும் வார்த்தைக் குறிப்பு]
நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் பேஷன டெக்னாலஜி, மேற்சொன்ன வணிகமுத்திரைகளின் உரிமையாளராக இருப்பதோடு, 1986இல் தொடங்கிய காலம் முதல், என்ஐஎஃப்டியின் ஸ்டைலாக்கப்பட்ட சின்னத்தின் பிரதிநிதித்துவத்திற்கான தனித்துவமான வகையில் அசல் கலைநய வேலையின் பதிப்புரிமையாளராகவும், மேற்சொன்ன வணிக முத்திரைகளைப் பயன்படுத்தியும் வருகிறது. அதன் உள்ளார்ந்த தரம்,சேவை மற்றும் நீண்ட பயனாளர் மற்றும் விரிவான விளம்பரங்களின் காரணமாக, மேற்சொன்ன “அறிவுசார்ந்த சொத்துக்கள்” விலைமதிக்கமுடியாத நல்லெண்ணத்தையும் மதிப்பையும் பெற்றுள்ளன மற்றும் அவை நிறுவனத்துடனும் தனித்தன்மையுடையனவாக இருக்கின்றன. இந்த “அறிவுசார்ந்த சொத்துக்கள்” என்ஐஎஃப்டி தவிர வேறுயாரும் தனியுரிமைக் கொண்டனவாக மற்றும் அதை ஃபேஷன் தொழில்துறையுடன் தொடர்புடையதாகப் பயன்படுத்தி தனித்துவமாக என்ஐஎஃப்டியையே குறிப்பிடுகிறது.
குறிப்பிட்ட நிறுவனங்கள் ஏமாற்றுகரமாகவும் அங்கீகாரமற்ற வகையிலும் எமது அறிவுசார்ந்த சொத்தை குழப்பும் விதமாக அதே போன்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் மற்றும்/அல்லது தங்களின் வியாபாரம் மற்றும் சேவையை என்ஐஎஃப்டியுடன் இணையானதாகவும், உருவானதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் எங்களின் கவனத்துக்கொண்டு வரப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இதன் மூலம் எச்சரிக்கப்படுவதாவது என்ஐஎஃப்டி அத்தகைய எந்த நிறுவனத்துடனும் தொடர்பினைக் கொண்டிருக்கவில்லை அல்லது அத்தகைய எந்த நிறுவனத்தை/தொழிலை எந்தவொரு வியாபரத்தையும் நடத்துவதற்கோ அல்லது எந்தவொரு சேவையை அளிப்பதற்காக பதிவு செய்வதற்கோ அல்லது மேற்சொன்ன அறிவுசார்ந்த சொத்துக்களை/முத்திரைகளை அல்லது எந்தவொரு பெயரை/முத்திரையை மாறுபட்டவகையில் ஒரே மாதிரித் தோற்றத்தைத் தருவதாகவோ கொண்டிருப்பதற்கு அங்கீகரிக்கவில்லை. இதன்படி அறிவிப்பதாவது என்ஐஎஃப்டி மேற்காணும் அறிவுசார்ந்த சொத்துக்களுக்கு இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் பிற நாடுகளிலும் எல்லாவிதமான உரிமையையும் கொண்டிருக்கிறது மற்றும் பொருட்கள், சேவைகள், மற்றும்/அல்லது வியாபாரங்களை என்ஐஎஃப்டியில் இருந்து உருவானதாகவோ, அங்கீகரிக்கப்பட்டதாகவோ, ஒப்பக்கொள்ளப்பட்டதாகவோ காட்டுவதற்காகவோ மேற்சொன்ன அறிவுசார்ந்த சொத்துக்களையோ அல்லது எந்தவகையிலும் அதேபோன்று குழப்பும் விதமாக இருக்கும் எந்தவொரு அறிவுசார்ந்த சொத்தையும் தவறாகப் பயன்படுத்துவதாக அறியப்படும் எந்தவொரு நபர் அல்லது நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் குற்றப்பிரிவு சட்டநடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது. கையொப்பம் ரஜினி சோப்ரா துணை வாரிய செயலர் மற்றும் சட்ட அதிகாரி அறிவுசார்ந்த சொத்து உரிமை மையம், நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, என்ஐஎஃப்டி வளாகம், ஹவுஸ் காஸ், குல் மொஹார் பார்க், புது டெல்லி – 11016, இந்தியா தொலைஃபேக்ஸ: 011 26542074 . மின்னஞ்சல்: csrajnichopra@gmail.com வலைதளம்: www.nift.ac.in
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||