|
B. Des. (பேஷன்
வடிவமைப்பு
)
காலங்காலமாக லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில்
அதிக எண்ணிக்கையிலான ஆடை உற்பத்தி நிலையங்கள் இந்தியாவில் உள்ளன.
உயர்தர பேஷன் ஆடைகளை அளிப்பதில் இந்தியா ஒரு மிகப்பெரும் வழங்குநராக
மாறியுள்ளது மற்றும் தற்போதைய நவநாகரீகச் சூழலை உருவாக்கியதில் NIFT ன்
பங்கை மறுக்க இயலாது.
பேஷன் மற்றும் மேலாடை
குறித்த பாடத்திட்டம் தீவிர ஆராய்ச்சி, பகுப்பாய்வு, புதிது புனைதல்
மற்றும் தனித்துவம் ஆகியவற்றின் மூலம் சிந்திக்கும் செயல் முறைக்
கல்விச் சூழலை அளிக்கிறது. ஒருங்கிணைந்த வடிவமைப்பு தத்துவத்தின் மூலம்
வளர்ந்து வரும் பேஷன் அரங்கில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்நோக்கவும்,
எடுத்துரைக்கவும் தொழில் நெறிஞர்களால் இயலும்.
சந்தைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவை
இருந்தால் மட்டுமே சமூக கலாச்சார மற்றும் வியாபார சூழல் குறித்த இந்த
ஆழ்ந்த உணர்தலை அதே அளவு தொழில்முறைசார்ந்த புரிதலோடு பொருந்தச் செய்ய
முடியும்.
இரண்டாம் ஆண்டில் NIFT கல்வி மையங்களில் கிடைக்கப்பெறும் சிறப்புத்
தகுதி பயிற்சிகளை பொறுத்து பேஷன் வடிமைப்பு மற்றும் தோல் வடிவமைப்பு
ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த கல்வித்
திட்டம் வழங்குகிறது.
பேஷன் வடிவமைப்பு
பேஷன் வடிவமைப்பு சிறப்பு பயிற்சிக்குரிய வழிகாட்டும் மற்றும் கவனத்தை
குவிக்கும் அணுகுமுறையானது புதிதுபுனையும் திறனை மேம்படுத்தி அதை
நெறிமுறைப்படுத்தும் திறனை மாணவர்களின் மனதில் ஆழப் பதியச் செய்கிறது-
பன்னாட்டு ஆடை வடிவமைப்பின் போக்குகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும்
வகையிலும், ஒரு வடிவமைப்பு குறிப்பை அறிந்து அதை செயல்படுத்தும்
அவர்களின் திறமையை வளர்க்கும் வகையிலும் இந்தப்பாடத்திட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலையான, சுழற்சி முறையிலான செயல் முறை அனுபவங்களின் வாயிலாக
பேட்டர்ன்களை உருவாக்கவும், ஆடைகளை துல்லியமாக வெட்டவும், தயாரிக்கவும்
மாணவர்களுக்கு உதவுகிறது. |