சென்னை
     
      கல்வி சார்ந்தவை  >முழுநேரக் கல்வித்திட்டங்கள்  
   
 
 

Intranet Login

Username:

Password:

niftmail
  இளங்கலை கல்வித்திட்டங்கள் | முதுகலை கல்வித் திட்டங்கள்  
   
   

இளங்கலை கல்வித் திட்டங்கள் - வடிவமைப்பு

 

இளங்கலை கல்வித் திட்டங்கள் தொழில்நுட்பம்

     

B. Des. (ஜவுளி வடிவமைப்பு மற்றும் பின்னலாடை வடிவமைப்பு)

 
ஆசிரியர் குழு  உறுப்பினர்கள

உள்ளடக்கம்

 

 

 
 

  

இந்தியா அதன் வளமையான ஜவுளி மற்றும் ஆடை அணிகலன் பாரம்பரியத்திற்காக உலகெங்கிலும் அறியப்படுகிறது. பல்லாண்டுகளாக அந்நியப் படையெடுப்புகள், வியாபாரம், மதம் மற்றும் பிற காரணிகள் இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேஷன் மற்றும் ஜவுளிப் பிரிவானது ஜவுளி சம்பந்தமான விரிவானக் கல்வியை அளித்து மேலாடை மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களுக்கான பேஷன் தொழில் துறைகளில்  புதிதுபுனைதல், தனித்தன்மை மற்றும் வடிவமைப்பின் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தி பல்வேறு தொழில்வாய்ப்புகளை பெற வழிசெய்கிறது

        இறுக்கமான பின்னலாடைகள் மற்றும் அச்சுகள் சம்பந்தப்பட்ட  ஜவுளிப் பாடப்பிரிவுகள் ஓன்றுக்கொன்று ஈடுசெய்பவை ஆகும் மற்றும் இவை ஒன்று சேர்ந்து  வடிவமைப்பின் புதிது புனையும் சக்திகளோடு ஜவுளி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, அதே நேரத்தில் இன்றைய வடிவமைப்பாளர்கள் பணிபுரியும் சமூக, பண்பாட்டு மற்றும் வரலாற்று சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு வளமையான, பல்துறை கல்வித்திட்டத்தை அளிக்கிறது. இரண்டாம் ஆண்டில் NIFT கல்வி மையங்களில் கிடைக்கப்பெறும் சிறப்புத் தகுதி பயிற்சிகளைப் பொறுத்து  ஜவுளி வடிவமைப்பு மற்றும் பின்னலாடை வடிவமைப்பு ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த கல்வித் திட்டம் வழங்குகிறது.

பின்னலாடை வடிவமைப்பு

பின்னலாடை வடிவமைப்பின்  சிறப்பு தகுதி பயிற்சி இந்திய பின்னலாடைத் தொழிலின் தேவைகளுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்படுகிறது. பின்னலாடை தொழில் நெறிஞர்கள் மூலம் தற்போதைய ஜவுளித் தொழிலை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதே வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் நோக்கம் ஆகும்.   பின்னலாடை வடிவமைப்பு சிறப்புத் தகுதி பயிற்சியில் மாணவர்கள் சிமா செய்க்கி மற்றும் ஸ்டோல் எனப்படும் கணினிமயமாக்கப்பட்ட தட்டைப் படுக்கை பின்னலாடை இயந்திரங்கள் போன்ற உயர் தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளை பயன்படுத்துவது அவசியமாகிறது. வட்டமான மற்றும் தட்டையான பின்னல் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் வேறுபாடுகள், சாத்தியமான கட்டமைப்பு மேம்பாடு, பக்குவப்படுத்துதல் மற்றும் ஆடை தயாரிப்பு ஆகியவற்றையும் மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்யப்படும்.